எஸ்.என்.எஸ். இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புடன் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தினர்.

இன்று காலை கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி பந்தயசாலை காவல் நிலையத்தில் தொடங்கி, ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது.

முன்னதாக மாணவர்களிடம் துணை ஆணையர் சரவணன் பேசுகையில், ‘கோவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் 34 மாணவர்கள் உயிரிழந்தனர்.
போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததாலே இந்த விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்க இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாணவர்களே விழிப்புணர்வு பேரணியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
இந்த பேரணியில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.