காங்கேயத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு - பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பு

மக்கள் கருகி வேதனையில் வெந்து, வெம்பி, காய்ந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் முதலமைச்சர் மட்டும் குடும்பத்தோடு சென்று கொடைக்கானலில் ஓய்வெடுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அதிமுக நகர ஒன்றிய கழக சார்பில் இன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான NSN.நடராஜ் மற்றும் காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்துகொண்டு நீமோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் பொதுமக்களுக்கு காக்க மோர் மற்றும் தர்பூசணி, இளநீர் ஆகியவைகளை தினசரி வழங்கப்படும் என தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி வி.ஜெயராமன், காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலே மக்கள் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் கஷ்டப்பட்டு கொண்டுள்ளனர். ஒரு மாத காலமாக காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் வரவே இல்லை. இதேபோன்றுதான் வெள்ளகோவில் நகராட்சி, தாராபுரம் நகராட்சி, சென்னிமலை பேரூராட்சி உட்பட அனைத்து கிராமங்களிலும் தண்ணீருக்கு தவியாய் தவித்துக் கொண்டுள்ளனர். மக்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம், கடும் வெயிலிலும் கட்டிடத் தொழில் வேலை நடப்பதில்லை.

விவசாயி பணிகள் தண்ணீர் இல்லாததால் விவசாயக் கிணறுகள் வறண்டு போய் விவசாயம் பாதித்து, விவசாயத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். தென்னை மரங்கள் அனைத்தும் காய்ந்து தொங்கிக் கொண்டுள்ளது. காங்கேயம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நீர் இல்லாமல் தென்னை மரங்கள் வறண்டு வருகின்றது. காவிரியில் தண்ணீரை பெற்றுக் கொடுத்து குடிநீர் தாகத்தை தீர்க்க வேண்டிய நிலையில், அதேபோல பரப்பிக்குளம் ஆழியார் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி விவசாயி உடைய தென்னை மரங்களை காப்பாற்ற வேண்டிய முதலமைச்சர் தேர்தல் முடிந்தவுடன் நேரடியாக குடும்பத்துடன் சென்று ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.

மக்களோ கருகி வேதனையில் வெந்து, வெம்பி, வெந்தனனிலே சாய்ந்து கொண்டு இருக்கின்றனர். வெயிலிலே பல இடங்களிலே உயிர்கள் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்திலே முதலமைச்சர் மட்டும் குடும்பத்தோடு சென்று கொடைக்கானலில் ஓய்வெடுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல கொடைக்கானலில் போய் கோல்ப் விளையாடி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதற்கெல்லாம் மக்கள் ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும் போது சரியான பாடங்கள் கற்பிப்பார்கள். ஏழை அழுத கண்ணீர் கூர்மையான வாளுக்கு சமம் என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சில் காங்கேயம் ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...