கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானியாற்றிலிருந்து கோவை மாநகரத்திற்கு மட்டுமின்றி திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களுக்காக 16 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பெரிய அளவில் அரசு அனுமதியுடன் மின் மோட்டார் மூலம் பவானியாற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதே போல் பவானியாற்றிலிருந்து விவசாய பாசனத்திற்கு நெல்லித்துறை முதல் சிறுமுகை வரை 200-க்கும் மேற்பட்ட மின் மோட்டார் மூலம் விவசாயிகள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இதனிடையே பருவமழை தவறியதால் பவானியாற்றிலிருந்து பவானிசாகர் அணைக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நீர்நிலை மேலாண்மையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த அறிக்கையைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் விவசாய பாசனத்திற்கு செல்லும் மின் மோட்டார்கள் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், தமிழகத்தில் 32 மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
2047 கோடி ரூபாய் வறட்சி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு 184 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரத்தை பேணிக்காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடி நீர் ஆதாரமாக பவானி ஆறு விளங்குகிறது. ஆகவே இப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் மின் மோட்டார் மூலம் பவானியில் இருந்து நீர் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
இதற்கு விவசாய சங்க துணைத்தலைவர் ராஜேந்திரன் பதிலளித்து பேசினார். பின்னர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன முழுக்கங்களை விவசாயிகள் எழுப்பினர்.