கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மாதேஸ்வரன் மலையருகே ஆட்டோ நகர் பகுதியில் ஆடு மேய்பதற்காக வந்த பெண் அங்குள்ள மரத்தின் அடியில் எரிந்த நிலையில் பிணம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து, காரமடை காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காரமடை போலீஸ் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், கோவை மாவட்ட எஸ்.பி. ரம்யபாரதி, பொறுப்பு டி.எஸ்.பி. குணசேகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, காவல்துறையினர் தெரிவிக்கையில், 80 சதவிகிதம் எரிந்த நிலையில் இருக்கும் இந்த சடலம் பெண்ணாக இருக்கலாம் என்றும், வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவந்து எரித்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், எரிந்த நிலையில் பிணத்தை எடுத்து வந்த வாகனத்தின் டயர் தடயம் மற்றும் தனித் தனியே வெவ்வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிந்த உடலின் கால்கள் ஆகியவற்றைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.