நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்- விஜி தம்பதியினரின் மகன் தர்சன். தற்போது நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளார்.
இந்நிலையில், இன்று இருசக்கர வாகனத்தில் குன்னூர், காந்திபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வளைவில் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி இவரது வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய தர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றார்.

மேலும், இவ்விபத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த தம்பதியினருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர் தர்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், உயிரிழந்த மாணவர் தற்போதே 10-ம் வகுப்பு தேர்வு எழுதிள்ளதால் அவருக்கு 15 முதல் 16 வயதே இருக்கும். அவரிடம் வாகனம் ஓட்டுநர் உரிமம் இல்லை. விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகிறோம்' என தெரிவித்தனர்.

பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களது விடுமுறை நாட்களை கழிக்க வாகனங்களில் அவ்வப்போது வெளியே செல்ல விரும்புகின்றனர். அவ்வாறு வாகனத்தை இயக்க வேண்டும் என்றால் 18 வயது பூர்த்தியடைந்து வாகன ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் என்பதை அவர்கள் கடைபிடிப்பது இல்லை. இதனால், ஏராளமான சாலை விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது தனி கவணம் செலுத்துவதன் மூலம் இவ்வாறான உயிரிழப்புகளை தடுக்க முடியும்.