நூற்புழுக்களின் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாக உள்ளது. ஒரே வகையான காய்கறிப் பயிரினையோ அல்லது மற்ற பயிரையோ தொடர்ச்சியாக பயிரிடுவதன் மூலம் இத்தகைய நூற்புழுக்கள் மண்ணில் தங்கி இனத்தை பெருக்கி அடுத்தடுத்து பயிர் செய்யும்போது அதிக அளவில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

காய்கறிப் பயிர்களில் பட்டம் இல்லா நேரத்தில் பயிர்சுழற்சி முறையில் செண்டுமல்லியை பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை நன்றாக கட்டுப்படுத்த முடியும். செண்டுமல்லி வேரிலிருந்து ஆல்பா-டெரிதினைல் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது.
இவ்வேதிப்பொருள் மண்ணில் நூற்புழுக்கள், பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒருசில பூச்சிகளை கொல்லும் உயிர் கொல்லி பண்பினை கொண்டது. இந்த ஆல்பா-டெரிதினைல் மண்ணில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் மண்ணில் உள்ள உயிர்கொல்லிகளின் முட்டைகளின் மீது வேதியியல் பாதிப்பினை ஏற்படுத்தி முட்டை பொறிக்கும் திறனை பெருமளவு குறைக்கிறது.
இதனால் இவ்வுயிர் கொல்லிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுகிறது. செண்டுமல்லி உயிருள்ள பயிரின் வேரிலிருந்தே ஆல்பா-டெரிதினைல் சுரக்கிறது. ஆதலால் பயிர் சுழற்சி முறையில் காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை ஊடுபயிராக குறுகிய காலத்திற்கு (2-3 மாதம்) பயிரிடுவதால் நூற்புழு கட்டுப்பாட்டில் நல்ல பலனை பெறமுடியும்.
எனவே காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை பயிர் சுழற்சி செய்து பின்பு கோடை உழவு செய்தல் மூலம் “வருமுன் காப்போம்” என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறிப்பயிர்களால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறமுடியும் என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறை ச.சுப்ரமணியன் மற்றும் கி.பூர்ணிமா தெரிவித்துள்ளனர்.