திருப்பூரில் தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் - இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது..!

மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த சென்னை ஆவடியை சேர்ந்த பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் பிணலாடை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபர்களை குறிவைத்து பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக மாநகர காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்ததை எடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த குரலகம் என்ற தனியார் தங்கும் விடுதியை தெற்கு காவல் ஆய்வாளர் கணேஷ் குமார் தலைமையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.



இதில் சென்னை ஆவடியை சேர்ந்த பெண்ணை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்பவரையும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரையும் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் மீதும் திருப்பூர் மாநகர காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...