2017-18 விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் சமர்பிக்க கெடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாணவர்களுக்கு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துகுடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இதே போல் பெண் வீராங்கனைகளுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோயில், பெரம்பலூர், தேனி, புதுகோட்டை, தருமபுரி, சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இவ்விடங்களில் உள்ள விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களிடம் பெற்று கொள்ளலாம் என அரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், இளைஞர் நல அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்பிக்க இறுதி நாள் வரும் 20ம் தேதி என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...