போக்குவரத்துக்கு இடையூறில்லா பேருந்து நிறுத்தம் : கோவை மாநகர போக்குவரத்து போலீசாரின் புதிய முயற்சி

வீட்டில் இருந்து புறப்பட்டும் வாகன ஓட்டிகள், செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவதற்குள் கோவை மாநகரின் ‘டிராபிக்’-களுக்குள் சிக்கித்தவிப்பது வாடிக்கையாகிவிட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவரும் கோவையில் நெருக்கடிகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி, ‘பஸ்-பே’ என்ற திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். மாநகர பேருந்துகள் ஆங்காங்கே உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் போது பின்னால் வரும் வாகனங்கள் சாலைகளில் தேங்கி நிற்பதை தவிர்க்கவும், மற்ற வாகனங்களுக்கு இடையூறில்லாமல் பேருந்துகள் நிற்க வழிவகை செய்வதுமே இந்த ‘பஸ்-பே’ திட்டத்தின் நோக்கம்.

இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது :- 

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் முதல் படியாக அவினாசி சாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘க்ரீன் காரிடார்’ திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

வாகன ஓட்டிகள் அவினாசி சாலையில் 40 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது சாலைகளில் உள்ள சிக்னல்களில் மாட்டிக்கொள்ளாமல் பயணிகப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ‘க்ரீன் காரிடார்’. தற்போது தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களோடு, காவல் துறை இணைந்து இத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். 



பஸ்-பே

பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் பேருந்துகள் பெரும்பாலும் சாலையோரம் நிற்பதில்லை. பயணிகள் நிழற்குடையின் கீழ் நிற்காமல் சாலைகளில் நிற்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு பேருந்துகள் சாலையோரம் நிறுத்தாமல் வழித்தடத்தில் நிறுத்தப்படுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சிக்னல்களை தொடர்ந்து, வரும் பேருந்து நிறுத்தங்களால் அதிகமான போக்குவரத்து நெரிசலை வாகன ஓட்டிகள் சந்திக்க வேண்டியுள்ளது. 

அதனால், பேருந்துகள் நிற்க சாலையோரம் ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் பேருந்து சரியான இடத்தில் வந்து நிற்க, பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு சுவர்களில் மின்னும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதுவே இந்த ‘பஸ்-பே’ திட்டம். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள 10 இடங்களை தேர்வு செய்தோம். அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் எம்.ஜி.ஆர். மார்க்கெட், சிவாலயா சந்திப்பு, சுந்தராபுரம், கோவைப்புதூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட 8  இடங்களில் ‘பஸ்-பே’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை தொடர்ந்து மேலும் பல இடங்களில் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும். 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம். அவ்வாறு பொதுமக்கள் கொடுக்கும் நல்ல ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...