பத்தாம் வகுப்பு தேர்வில் உடுமலை மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் - பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு

ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி மாணவி யுகாஷினி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பயிலும் யுகாஷினி என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடமும், திருப்பூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்தார்.



இந்த நிலையில், இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவி யுகாசினிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பின்னர் பள்ளியின், தாளாளரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆர்.கே. ராமசாமி மாணவிக்கு இனிப்புகள் வழங்கி,



இதே போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்விலும் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். என் வெற்றிக்கு காரணம் தாய் மற்றும் ஆசிரியர்கள் ஊக்குவிப்பு தான். பள்ளியில் அதிகமான மாதிரி தேர்வுகள் வைத்து ஆசிரியர்கள் என்னை உற்சாகம் ஊட்டினர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தாய், பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

பள்ளியின் தாளாளர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, தற்பொழுது மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற யுகாஷனி ஆர்.கே.ஆர். குரு வித்யா பள்ளியில் எல்.கே.ஜி முதல் படித்து வருகிறார். தற்சமயம் அயராது படித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் இந்த வெற்றிக்கு காரணமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்று வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளியின் செயலர் கார்த்திக் குமார், முதல்வர்கள் மாலா மற்றும் மஞ்சுளா தேவி, செல்வகுமார், பெற்றோர், ஆசிரியர், கழக நிர்வாகிகள் மற்றும் உடுமலை நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவி நேற்று வெளியூரில் இருந்த காரணத்தால் இன்று பள்ளிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...