கிணத்துக்கடவு பகுதியில் கொலை குற்றவாளிகள் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

கொலை வழக்கு குற்றவாளிகளான இசக்கி மாரி செல்வம் மற்றும் பாதாளம் ஆகிய இரண்டு நபர்களையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28) ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காக இசக்கி மாரி செல்வம் மற்றும் பாதாளம் ஆகியோர் மீது கிணத்துக்கடவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இசக்கி மாரி செல்வம் மற்றும் பாதாளம் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, அந்த நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.அவ்வுத்தரவின் அடிப்படையில் கொலை வழக்கு குற்றவாளிகளான இசக்கி மாரி செல்வம் மற்றும் பாதாளம் ஆகிய இரண்டு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மே.12 சிறையில் அடைத்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...