உள்ளாட்சித் தேர்தலுக்கான கோவையின் இறுதி வாக்குச்சாவடி பட்டியல் நாளை வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2017-க்காக நகர்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்வு செய்யப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்டத் தேர்தல் அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதியன்று கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துரைகள் ஆகியவை பரிசீலனை செய்து இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதியன்று (நாளை) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வெளியிடப்படவுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...