வறட்சி நிவாரண பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வறட்சி நிவாரண பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு கூட்டம் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மற்றும் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமார் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். 



இக்கூட்டத்தில் நிர்வாக ஆணையர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், கோவை மாநகராட்சி பகுதிக்கு சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது வறட்சியின் காரணமாக பில்லூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் மழைக்காலத்தில் சிறுவாணி அணையிலிருந்து தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கும் வகையில் ஆள்துளை கிணறு அமைத்திடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சீர் செய்யும் வகையில் நகர்ப்பகுதியில் அனுமதியின்றி பைப்லைன் மூலம் குடிநீர் எடுப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிளிலும் ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி பைப்லைன் பயன்படுத்தவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் வடிகால் வாரியத்துறையுடன் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் இணைந்து செயல்பட்டு தினந்தோறும் குடிநீர் வழங்கிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் விநியோகத்தில் சிறப்பு கவனம் எடுத்து தினந்தோறும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தற்பொழுது வறட்சி கால சூழ்நிலை கருத்தில் கொண்டு வருங்காலங்களில் ஏரி மற்றும் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் தேங்கும் அளவிற்கு ஏதுவாக குடிமராமத்து பணிகள் மூலம் கால்வாய்கள் மற்றும் சட்டர், ஏரி மற்றும் குளங்களில் கரைப்பகுதிகளை பலப்படுத்துல் போன்ற பணிகள் மேற்கொள்ள அரசு உத்திரவிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாகவும், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம் வரும் காலகட்டங்களில் தேவையான குடிநீர் விநியோகம் செய்திட பயனுள்ளதாக இருக்கும் என்பதே ஆகும். அதற்கேற்ப சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு ஆகிய பொதுப்பணித்துறை அலுவலர்களும் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென நிர்வாக ஆணையர் அறிவுறுத்தினார். 

மேலும், கால்நடை பராப்பரிப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கேற்ப கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை உற்பத்தி செய்வதிலும் கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காய்த்ரிகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...