நெல்லில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணங்களின் ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு நிதியுதவி

ஊட்டச்சத்துக் குறைபாடு, பெண்கள் மற்றும இளம் வயது சிறுவகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கவல்லது. நமது நாட்டில் ஏறத்தாழ 56.2 சதவிகித பெண்கள் இரத்தசோகை குறைபாடுடனும் மற்றும் 0-3 வயதுள்ள குழந்தைகளில் 45 சதவீதம் சராசரிக்கும் குறைவான எடையையும் கொண்டுள்ளனர்.

இந்த குறைபாடுகளை தீர்க்கவல்ல சத்து மாத்திரைகள் மற்றும் சிறப்பு உணவுக்கான செலவு அதிகமாதலால், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலனுக்கு அது ஒரு எட்டாக்கனியாக உள்ளது.

நெல் போன்ற பிரதானப் பயிர்களில் மரபியல் மேம்படுத்தல் முறையில் ஊட்டச்சத்துக்களை செறிவுபடுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

இந்திய அரசாங்கத்தின் உயிர் தொழில் நுட்ப தொழிற்சாலை ஆராய்ச்சி உதவிகுழுமம், “குழந்தைகளின் உடல் நலம் காத்தல் என்ற ஒரு திட்டத்தினை அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனம், வெல்கம் டிரஸ்ட் மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து மருந்துகள் மற்றும் வேளாண் பொருட்களின் மூலம் போக்கிடும் திட்டத்தினை செயல்படுத்துகின்றது. 

இந்த திட்டத்தின் கீழ், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த தாவர மூலக்கூறுவியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் மையமும், மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லின் மூலம் பேணுவதற்காக வரைந்த ஒரு திட்டம் 1.5 கோடி நிதியுதவியுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் உயர்விளைச்சல் மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லில் உள்ள முக்கிய குணாதிசயங்களான ஃப்ளாவனாய்டுகள், லியூட்டின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச் சத்துக்களின் உயிர்நிலைப்புத்தன்மை மற்றும் சர்க்கரை நோயை எதிர்க்கவல்ல குறியீடுகளை ஆராய்ச்சி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...