கோவை மாநகரில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு புலன் விசாரணை குறித்து பயிற்சியளிக்க இருப்பதாக மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு சிறப்பு புலன் விசாரணை குறித்த வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வழங்கினார். இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி, துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கினர்.