வால்பாறையில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது

வால்பாறையில் பருவமழை நேரத்தில் சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கைகள், முகாம்கள் அமைத்தல், கால்நடைகள் காக்கவும் வன உயிரினங்கள் புகுதல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்து வரும் இந்த மழையால் வால்பாறையில் உள்ள சோலையார் அணை, சின்னக்கல்லார் அணை, நீரார் அணை மற்றும் அக்காமலை செக்டேம் ஆகியவை நிரம்பி வழியும் இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.



அதிக மழை பெய்யும் போது குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வண்ணமும், சாலைகளில் மரங்கள் தடுக்கவும் மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சப் கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில் வாசுதேவன் மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகராட்சி திருமண மண்டபம் மேலும் அட்டகட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சோலையார் அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அதிக மழை பெய்வதற்கு முன்பதாகவே அவர்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ துறை சார்பாக டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கொசுகளை ஒழிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான மருந்துகளை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்தினர்.



மேலும் அரசு பேருந்துகளை சரியாக செயல்படுத்த வேண்டும் மேலும் மின்சார துறை சார்பாக மின் துண்டிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும் வனத்துறை சார்பாக வனவிலங்குகள் ஊருக்குள் போகாமல் தடுக்க வேண்டும் ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் மண்ணரிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பாடாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனை செய்ய வேண்டும் என்றும்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...