கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் இதர வகுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் இன்று (17.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளி கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது உண்டு, உறைவிட வசதிகளுடன் இரண்டு பாடப்பிரிவுகளுடன் (கணிதம்/ கணினி அறிவியல்) மற்றும் (உயிரியல்/ கணினி அறிவியல்) இயங்கி வருகிறது.



இப்பள்ளியில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 ஆசிரியர்கள் வீதம் நியமிக்கப்பட்டு, சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. கடந்த 2022-2023 கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவிகள் NEET தேர்விலும், JEE முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்று இந்தியாவின் முதன்மை கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனர்.

காலை 9:30 மணி முதல் 11.00 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் NEET தேர்விற்கும், JEE தேர்விற்கும் வல்லுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இங்கு பயின்று வரும் மாணவ/மாணவியருக்கு அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் (அதாவது NTA நடத்தும் அனைத்து தேர்வுகள், NATA, CLAT, IIS IISER, BITSAT, IMU, IMU-CET, DESIGN போன்றவற்றிற்கான தேர்வுகள்) அரசு முழு கட்டணத்தையும் செலுத்துகிறது.

மேலும், மாணவ/மாணவியருக்கு உயர்தர உணவு வகைகள் காலை, மதியம், இரவு வழங்கப்படுகிறது. காலை 11.15 மணி மற்றும் மாலை 04.15 மணி ஏதேனும் ஒரு பழத்துடன் பயிர்வகைகள், தின்பண்டங்கள் வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் 4:30 மணி முதல் 5:30 மணி வரை 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவியருக்கு இணை கல்வி செயல்பாடுகள் (காரத்தே, சிலம்பம், கதை சொல்லுதல், புகைப்படம் எடுத்தல், நாடக கலை) போன்றவை கற்பிக்கப்படுகிறது. 2023-2024 கல்வியாண்டில் மாணவ/மாணவியர்களை தொழில்துறை களப்பணிகளுக்கு (Industrial Visits) அழைத்து செல்லப்படுகின்றனர்.



அதன் மூலம் மாணவ/மாணவியருக்கு அயல்நாடு கல்வி முறை, உயர் கல்வி பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தியது. ஹங்கேரி, தாய்வான், ஜப்பான் போன்ற நாடுகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் மாணவ/ மாணவியர்களை சேர்ப்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்த மாதிரி பள்ளி செய்து கொடுக்கிறது. இப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கை, மற்றும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் இதர வகுப்புகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்கள்.

மேலும், பள்ளி வளாகத்தில் மாணவ,மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்படும் வரும் வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை விரைவில் முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார், மாதிரி பள்ளி தலைமையாசிரியர் பரிமளாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...