கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு

மழைக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைத்து, மழைநீரை சேகரித்தால் கோடை காலங்களில் வரும் தண்ணீர் பிரச்சனைகளை தடுக்க முடியும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதமாக மழைக்காலங்களில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்த காட்சிகளை கொண்டு குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் காலநிலைக்கு ஏற்ப வெப்பம், குளிர்ச்சி, மழை என்பது மாறி மாறி வருகிறது.



ஆனால் கடந்த ஆண்டுகளை விட எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை காலத்தில் கடும் வறட்சி மற்றும் வெப்பம் அதிகரித்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சமும் நிலவியது. இதனிடையே நம்ம ஊருக்கு தேவையான தண்ணீரை நாமே உற்பத்தி செய்யும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பல்வேறு இடங்களில் குளம், குட்டைகளை தூர்வாரி வருகின்றனர்.



இதனிடைய கடந்த வாரம் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள குட்டையை ப்ரூக்ஃபீல்ட்ஸ் பங்களிப்புடன் தூர்வாரியதில் இரண்டு நாட்கள் பெய்த மழையில் வறண்டு கிடந்த குளம் நிரம்பி காட்சியளித்துள்ளது. இதே போல் மழைக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து சேகரித்தால் கோடை காலங்களில் வரும் வரச்சிகளை தடுக்க முடியும் என குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர். அதே போல் தூர் வாருவதற்கு முன்பும் தூர்வாரிய பின்பும் மழைநீர் தேங்கிய கண்கவர்ந்த காட்சிகளை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...