கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முகாம் - வரும் மே 31ஆம் தேதியுடன் முடிவு

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20% சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்ட்பட்டவர்கள் பலன்பெற்றுள்ளனர் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக கேஎம்சிஹெச் தற்போது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவியை அறிமுகம் செய்துள்ளது. மிகத்துல்லியமான அறுவை சிகிச்சைக்கு இந்த அதிநவீன ரோபோ இயந்திரம் உதவுகிறது. மேலும் மென்மையான திசுக்களைப் பாதுகாத்து நோயாளி விரைவில் குணமடையவும் உதவிகரமாக உள்ளது.

செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இந்த கருவியானது அறுவை சிகிச்சையை சுலபமாகவும், விரைவாகவும் செய்துமுடிக்க உதவுகிறது. மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவை இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் முக்கிய பலன்களாகும்.

நோயாளி விரைவில் குணமடைவதால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகும். இந்த ரோபோட்டிக் கருவியைப் போல் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன 3டி சி ஆர்ம் (3D C-Arm) என்ற இமேஜிங் கருவியையும் கேஎம்சிஹெச் அறிமுகம் செய்துள்ளது. எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளின் துல்லியத்தை இது அதிகரித்து சிறந்த பலனைக் கொடுக்கும். எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளையும் மேம்பட்ட திறனுடன் செய்து முடித்திட இது உதவுகிறது.

முப்பரிமாண தொழில்நுட்பம் துணையுடன் மருத்துவர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. மேலும் ஸ்குரூக்கள், இம்பிளாண்டுகள் முதலானவற்றை துல்லியமாகப் பொருத்தி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற உதவியாய் உள்ளது. இந்த அதிநவீன இயந்திரங்கள் அளிக்கும் அனுகூலங்களை நோயாளிகள் எளிதில் பெற்றுப் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஒரு ரோபோட்டிக் மூட்டு மாற்று முகாமிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. 2024 மார்ச் 1 முதல் மே 31-ம் தேதி வரை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் இம்முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20% சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.

இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்ட்பட்டவர்களுக்கு ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து பலன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள733 9333 485 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...