தாட்கோ மூலம் ஆதிதிராவிட விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஆதிதிராவிட விவசாயியாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும்.
மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக அனைத்து தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.