கோவை அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் உத்தரவு

எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தண்டபாணிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (47). இவா் கோவை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2021 மார்ச் 23-ஆம் தேதி தனியாக தோட்டத்தில் இருந்தபோது, அங்கு வந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தண்டபாணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததை நிலையில், நீதிபதி குலசேகரன் மே.21 தீா்ப்பு அளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தண்டபாணிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...