சிங்கப்பூரில் கொரோனா பரவல்; கோவை விமான நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்

சிங்கப்பூரில் புதிய கொரோனா பரவலை அடுத்து, கோவை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் சிங்கப்பூர் இருந்து வரும் பயணிகளின் காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் சார்ஜாவுக்கும், 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறும்போது:

விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு கண்டறிய தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரத்தியேக வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடப்படவில்லை இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

கோவை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறும் போது:-

கடந்த முறை கொரோனா தொற்று பரவிய போது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதால் நோய் தொற்று பரவலை குறித்து தற்போது பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் பிரத்யேக தகவல் வந்தால் கடைபிடிக்கப்படும் என்றார்.

Newsletter

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...