மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து நேர்கோட்டில் இன்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.


கோவை: கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளின் வலசை பாதையாகவும் மேட்டுப்பாளையம் வனப்பகுதி விளங்குகிறது. வலசைப்பாதை வழியாகவும், யானைகள் இடம்பெயர்ந்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்தநிலையில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று மே.23 தொடங்கியது.



அதன்படி மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர் ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் யானையின் நடமாட்டம் குறித்து நேர்கோட்டில் இன்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின பயிற்சியக உதவி வன பாதுகாவலர்கள் 6 குழுக்களாக பிரிந்து ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக்குட்டை, குஞ்சப்பனை, உலியூர் ஆகிய பகுதிகளில் யானை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, நாளை யானைகளின் சாணம், சிறுநீர், அதன் கால் தடயங்கள் ஆகியவற்றை வைத்து யானைகள் கணக்கெடுக்கும் பணியும், நாளை மறுநாள் நீர்நிலைகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...