கோவையில் மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் 20 பவுன் நகை திருடிய பெண் கைது

கோவையில் மயக்க மருந்து கொடுத்து 65 வயது மூதாட்டியிடம் இருந்து 20 பவுன் நகை திருடி விட்டு தப்பிய பெண்ணை போலீஸ் கைது செய்தனர். திருடிய நகையும் மீட்கப்பட்டுள்ளது.


கோவை: மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி (வயது 55) என்பவரும் வந்தார். 

அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம் என்று நாகம்மாளை அழைத்தார். அவரும் வள்ளியுடன் மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றார். 

பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு நேரம் ஆனதால் கோயில் வளாகத்தில் படுத்து தூங்கினர். அதற்கு முன்பாக நாகம்மாள் தான் அணிந்திருந்த 20 பவுன் நகைகளை வள்ளி கூறியதன் பேரில் கழட்டி ஒரு பையில் வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது வள்ளியையும், நகை வைத்திருந்த பையையும் காணவில்லை.

பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்தனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்த வள்ளியை நேற்று மே.23 கைது செய்தனர். பின் அவரிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 

அவர் ஏற்கனவே ஆனைமலை தர்மராஜா காலனியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து அதன் உரிமையாளர் வீட்டில் 7 பவுன் நகை திருடி உள்ளார் .அதோடு சென்னை, காஞ்சிபுரத்திலும் கைவரிசை காட்டியுள்ளார். மேலும் நாகம்மாளிடம் நகை திருடும் முன் அவருக்கு பழரசத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை தூங்க வைத்து வைத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...