கோவை புலியகுளம் பகுதியில் பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்ட பெண் உட்பட இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு

சாரை பாம்புகள் விஷமற்றவை, அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என வீடியோ வெளியிட்ட உமா, அப்துல் ரஹ்மான் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்ட வனத்துறை அலுவலகம் இன்று மே.28 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடும் பணிகளில் தன்னார்வ அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை புலியகுளம் பகுதியில் 8 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒரு வீட்டில் இருந்துள்ளது.

இது தொடர்பாக கிடைக்கபெற்ற தகவலின் பேரில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினரான அப்துல் ரஹ்மான் மற்றும் சின்னவேடம்பட்டியை சேர்ந்த உமா ஆகியோர் அந்த பாம்பை பிடித்தனர்.

இதனை கோவை வனச்சரக அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.



இதனிடையே சாரை பாம்பை பிடித்த போது, சாரை பாம்புகள் விஷமற்றவை. அவற்றால் மனிதர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை எனவும், பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்ற விழிப்புணர்வு வீடியோவை அவர்கள் இருவரும் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அது வைரலானது.

இந்த நிலையில் பாம்பை மீட்ட அப்துல் ரஹ்மான் மற்றும் உமா மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதியின்றி பிடித்து செல்போனில் வீடியோ எடுத்து துன்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக வனத்துறையினர் அண்மையில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் வனத்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடித்த தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினரான இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வனப்பாதுகாவலரிடம் கேட்ட போது இதுபோன்று, மற்றவர்கள் ஈடுபடக்கூடாது எனவும், நல்லெண்ண அடிப்படையில் இருவரும் செயல்பட்டதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார். வீடியோ சமூக ஊடங்களில் வைரல் ஆனது தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...