உக்கடம், பெரியகுளத்தில் சைரன் பொருத்திய ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு தீவிரம்

உக்கடம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் ண்காணிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சைரன் மற்றும் மைக் மூலம் ரோந்து செல்லும் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


கோவை: மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், குறிச்சி குளம் உட்பட ஏழு குளங்கள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பூங்காக்கள், நடைபாதை உள்ளிட்ட அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்குளக்கரைகளை பராமரிக்க, போதிய உபகரணங்கள் இல்லாததுடன், கண்காணிப்பும் இல்லாததால் இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும், காதல் ஜோடிகளின் அத்துமீறல் காண்போரை முகம் சுழிக்க வைக்கிறது.

இதையடுத்து, சிறிய 'எலக்ட்ரிக்' ரோந்து வாகனம், நடைபாதை சுத்தம் செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

உக்கடம், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரு ரோந்து வாகனங்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. இந்த வாகனத்தில், 1.5 அடி உயரத்தில் நின்றுகொண்டே சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை, கண்காணிக்க முடியும். சைரன், மைக் மூலம், ரோந்து செல்லும் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...