கோவை தெற்கு மண்டலம், நொய்யல் ஆறு அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியின் நிலையை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட நொய்யல் ஆறு, குறிச்சி அனைக்கட்டிலிருந்து, குறிச்சி குளத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் (பாலக்காடு பிரதான சாலை முதல் புட்டுவிக்கி சாலை வரை சுமார் 2.2 கி.மீட்டர் நீளத்திற்கு) தூர்வாரும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணியினை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் (30.05.2024).

உடன் மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் (30.05.2024).