கோவையில் மாலை நேரம் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

கோவையில் மாலை நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மழை வெப்பத்தை தணித்து இதமான சூழ்நிலையை உருவாக்கியது.


கோவை: கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவையில் பரவலாக மழை பெய்துவந்ததால் அக்கிணி நட்சத்திரம் பாதிப்பு இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் கோவையில் மீண்டும் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்குமேல் கோவையில் பல்வேறு பகுதிகளிலும் கார்மேகங்கள் சூழ்ந்து இதமான காற்று வீசதுவங்கியது.

மேலும் மாலை 7 மணிக்குமேல் கோவை காந்திபுரம், இரயில்நிலையம், டவுண்ஹால், உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியதும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் பணிகள் முடித்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் சாலைகளில் குடைகளை பிடித்தவாறு நடந்து செல்வதை பார்க்கமுடிந்தது.

மேலும் கோவையில் பெய்த சாரல் மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...