கோவையில் செயல்பட்டு வரும் தனவர்சா சேரிடபில் அறக்கட்டளையின் சார்பில் திரையுலக பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஷை கவுரவிக்கும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோவையின் முக்கியப் பிரமுகர்கள், பெரு நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசையில் கே.ஜே.யேசுதாஷ் பாடல் நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.