கோவை கோனியம்மன் தேர் அருகில் இறைச்சிக் கழிவுகளை கொட்டிய நபர் கைது.!

ராஜ வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலின் தேர்நிலை திடல் பகுதியில் உள்ள தேர் அருகே இறைச்சி கழிவுகளை வீசிய முகமது அயாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தேர் திடல், ராஜ வீதியில் அமைந்துள்ள நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரின் அருகே இறைச்சி கழிவுகளை வீசி சென்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காந்தி பார்க் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வரும் முகமது அயாஸ் என்பவர், அவரது கடையில் இருந்த ஆடு மற்றும் கோழி இறைச்சிகளின் கழிவுகளை, கோனியம்மன் கோயிலின் தேர்நிலை திடல் (தேர்முட்டி) பகுதியில் உள்ள கோனியம்மன் தேர் அருகில் வீசிச் சென்று வருவதாக, அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 



இந்த நிலையில், தொடர்ச்சியாக, இறைச்சிக் கழிவுகளை தேர் அருகில் வீசிச் சென்றதால், உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் இது குறித்துபுகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் முகமது அயாஸ் மீது 153A (சாதி, மத ,இன மொழி தொடர்பாக விரோத உணர்வுகளைத் தூண்டுதல்), 290 (தொல்லை கொடுத்தல்), 504 (அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது அயாஸை நேற்று ஜூன்.6 கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...