கோவையில் சிபிஐ அதிகாரிகள் போல் நடிப்பு; டாக்டரிடம் ரூ.39,74,025 மோசடி

கோவை சாய்பாபா காலனியில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து, 70 வயது டாக்டர் சந்திரசேகரிடம் ரூ.39,74,025 பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் டாக்டர் சந்திரசேகர் (70). இவர் எலும்பு முறிவு கிளினிக் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் டெல்லியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் போதை பொருள் அனுப்பி உள்ளனர். அது குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட மற்றொருவர் தன்னை சிபிஐ அதிகாரி என்று தெரிவித்ததுடன், உடனே டெல்லிக்கு வந்து போதைப்பொருள் சம்பந்தமாக விளக்கம் தர வேண்டும், இல்லையென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டி உள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனக்கு யாரும் போதை பொருள் அனுப்ப வாய்ப்பில்லை, என தனது விளக்கத்தை அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய மர்ம நபர்கள், உங்களது வங்கிக் கணக்கில் இருப்பு தொகை எவ்வளவு உள்ளது? என கேட்டுள்ளனர். உடனே சந்திரசேகர் ரூ. 40 லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து மர்ம நபர்கள் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 25ஐ அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் மீது குற்றமில்லை என நிரூபித்த பின்பு அந்த பணத்தை நாங்களே உங்களது வங்கி கணக்கில் திருப்பி செலுத்தி விடுவோம் என நம்பும்படி தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய சந்திரசேகர் ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 25ஐ அனுப்பி உள்ளார். பின்னர் பல நாட்கள் கழித்தும் அவரது வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சந்திரசேகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. 

பின்னர் இது குறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஜூன்.6 புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...