லேண்ட் மார்க் குழுமத்தின் `ஈசி பை' ஆடைகள் ஸ்டோர் தனது புதிய ஷோரூமை கோவையில் துவக்கியுள்ளது. இது கோவையில் முதல் ஸ்டோர் ஆகும். இங்கு நடுத்தர மக்கள் வாங்கும் வண்ணம் குறைந்த விலையில் தரமான ஆடைகள் விற்பனைக்கு உள்ளது.

இந்தியாவில் லேண்ட் மார்க் குரூப் சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. லைப் ஸ்டைல், மேக்ஸ் மற்றும் ஸ்பார் போன்ற ஸ்டோர்கள் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்டோர்களாகும். அதன் வரிசையில் தற்போது 4-வது ஸ்டோரை தமிழகத்தில் திறந்து இந்த பகுதியில் லேண்ட் மார்க் கால் பதித்துள்ளது.
"சூப்பர் உடை, சூப்பர் விலை'' என்றடைப்படையில் துவக்கப்பட்டுள்ள ஈசி பை ஸ்டோர் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற 1000 விதமான புதிய ரக ஆடைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித் தனி பிரிவுகள் உள்ளது.
ரூ.69 முதல் ஆரம்பமாகும் துணிகளின் விலை ரூ.699 வரை உள்ளது. பருவ காலங்களுக்கு ஏற்ற வகையிலான ஆடைகள் உள்ளிட்ட அந்தந்தப் பகுதி மக்களின் விருப்பத்திற்கேற்ற ஆடைகளும் இங்கு விற்பனைக்கு உள்ளது.
இது குறித்து வர்த்தக தலைமை அதிகாரி ஆனந்த் ஐயர் கூறுகையில், மாநகர பகுதி அல்லாத மற்றும் புறநகர் பகுதிகளான `நவ பாரத்' எனப்படும் 2ம் கட்ட மற்றும் 3ம் கட்ட நகரங்களில் உள்ள நடுத்தர மக்கள் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வாங்கும் வகையில் 'ஈசி பை' ஸ்டோர்களை லேண்ட் மார்க் குரூப் துவக்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் புதிய பாணியில் நவநாகரீக ஆடைகள் எங்களது ஷோரூம்களில் உள்ளது. வரும் காலங்களில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய ஈசி பை ஸ்டோர் அதிக கவனம் செலுத்தும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஈசி பை, என்ஜிஓவுடன் இணைந்து குழந்தைகளுக்கான தரமான ஆடைகளை வழங்கி வருகிறது. 'நவபாரத்' வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு புதிய ரகத்திலான நவ நாகரீக ஆடைகளை நம்ப முடியாத விலையில் 'ஈசி பை' ஸ்டோர் வழங்குகிறது.
சந்தை விலையை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் புதிய ரக ஆடைகளை 'சூப்பர் உடை, சூப்பர் விலை' என்ற தாரக மந்திரத்துடன் 'தி நியூ ஸ்பிரிங் சம்மர் 17' கலெக்ஷன் வழங்குகிறது.
இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தாபு மற்றும் கலம்காரி கதைகளை பளிச்சிடும் வகையில் மலர்கள், அற்புதமான வடிவங்களுடன் எம்ப்ராயிடரி செய்யப்பட்ட பாரம்பரிய ஆடைகள் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கிந்திய ஆடைகளை விரும்பும் பெண்களுக்காக நீல வானம், ஆழ் கடல் நீலம், மலர் புல்வெளிகளுடன் கூடிய டிசைன்கள் உள்ளிட்ட 'ஸ்பிரிங் சம்மர் கலெக்ஷன்களும்' உள்ளன.
இதேபோல் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் விரும்பும் வண்ணம் கடல், சூரியன், மணல் மற்றும் கடல் அலைகள் போன்ற டிசைன்களில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் இண்டிகோ மற்றும் நீல நிற வண்ணங்களில் வடிமைக்கப்பட்டுள்ளது.
மேலும், துவக்க விழா சலுகையாக 1999 ரூபாய்க்கு ஆடைகள் வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் பரிசுக் கூப்பன் மற்றும் ரூ.1499 ரூபாய்க்கு ஆடைகள் வாங்குபவர்களுக்கு 300 ரூபாய் பரிசு கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பரிசு கூப்பன்கள் அடுத்த முறை 1499 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கும் போது ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.