அஞ்சல் குறைகேட்புப் புகார்களை வரும் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப கோவை மேற்கு மண்டல அஞ்சல் துறை வேண்டுகோள்

மண்டல அளவிலான தபால் குறைதீா் கூட்டம் அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. வாடிக்கையாளா்கள் தங்களது புகார்களை துணை இயக்குநா், மேற்கு மண்டல அலுவலகம், ஆா்.எஸ்.புரம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று மேற்கு மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


கோவை: மேற்கு மண்டல அஞ்சல் துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மண்டல அளவிலான தபால் குறைதீா் கூட்டம் அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது புகார்களை துணை இயக்குநா், மேற்கு மண்டல அலுவலகம், ஆா்.எஸ்.புரம், கோவை-641002 என்ற முகவரிக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும். கடிதத்தின் மேலுறையில் ‘தபால் குறை தீா்ப்பு கூட்ட புகார் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடா்பான புகார்களில், தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநா் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு /காப்பீடு தொடா்பான புகார்களில் சேமிப்பு கணக்கு எண்/ காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவா்/ காப்பீட்டாளா் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணப்பிடித்தம் தொடா்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...