கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றி சாதனை – கூட்டு முயற்சியை காரணம் என அதிகாரிகள் பெருமிதம்

கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் 5 டன் சரக்குகள் ஏற்றி அதிகாரிகள் சாதனை படைத்துள்ளனர்,


கோவை: கோவையில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சரியான திட்டமிடல் மற்றும் கூட்டு முயற்சியே இந்த சாதனைக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக பயணிகள் செல்லும் விமானங்களில் குறைந்த எடை கொண்ட சரக்குகளை மட்டுமே கையாள முடியும். இந்நிலையில் சமீபத்தில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது. இத்தகைய விமானங்களில் ஒவ்வொரு முறையும் 168 பயணிகள் வரை பயணிப்பது வழக்கம். சில நாட்கள் பயணிகளின் இருக்கைகள் குறைவாக புக்கிங் செய்யப்படும். அதுபோன்ற நேரங்களில் சரக்குகள் சற்று கூடுதலாக ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். கோவை விமான நிலையத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி காலை ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால் பயணிகளின் உடைமைகள் வைக்கும் பகுதியில் இடவாய்ப்பு சற்று அதிகம் கிடைத்தது.

உடனடியாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக சரக்குகளை ஏற்ற திட்டமிட்டனர். அன்றைய தினம் ஜவுளிப்பொருட்கள் மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தப்படும். பொருட்கள் ஏற்றுமதிக்காக வால்வு ஷார்ஜாவுக்கு புக்கிங் செய்யப்பட்டிருந்தன. வழக்கமாக 3.5 டன் வரை மட்டுமே ஏற்றப்படும். இந்நிலையில் 5 டன் வரை சரக்குகள் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டன. கூட்டு முயற்சியால் சாதனை படைத்தனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தில் மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 150 டன், வெளிநாட்டு பிரிவில் 800 டன் முதல் 850 டன் வரை என மாதந்தோறும் சராசரியாக 950 டன் முதல் 980 டன் வரை சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. காய்கறிகள், ஜவுளிப்பொருட்கள், வார்ப்படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்தை சேர்த்து 1,000 டன்னுக்கு அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...