தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பொள்ளாச்சியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்னும் பகுதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டமானது இன்றுடன் 29-வது நாளை எட்டியுள்ளது.



இதனிடையே, நேற்று (ஏப்ரல் 10) திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் சிலர் நிர்வாணமாக சாலையில் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அதிர்ப்திக்குள்ளாகினர்.



இதனைத்தொடர்ந்து இன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மக்கள் ஒன்றிணைந்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டத்தின் போது, அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் முழுமையாக கிடைக்க வேண்டும். திருமூர்த்திமலை அணை தூர்வாரி நீர்கொள்லளவை அதிகரிக்க வேண்டும். பிஏபி கால்வாயை செப்பனிட்டு தண்ணீர் விணாகாமல் கடைமடை வரை தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வறட்சியினால் வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாமல் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர். எனவே, அவர்களது குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...