கோவை வட்டாரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் – மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகள் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.


கோவை: கோவை, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடிதொடங்கி வைக்கும் விதமாக, தென்னமநல்லூர் ஊராட்சி, மீன்தொட்டி பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அண்மையில் ஜூன்.12 தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், தென்னமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல் பணிக்கு சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநர் 1,27,420 குறியீடு நிர்ணயம் செய்து வரப்பெற்றுள்ளது. அதில் 2024-25 ஆம் நிதியாண்டில் இதுவரை 39,477 மரக்கன்றுகள் பொது திறந்தவெளிப்பகுதி, சாலையோரம் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் நடுதல் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



அவற்றில் உலக சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு 5382 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார நர்சரி மற்றும் 12 கூடுதல் நர்சரிகளில் 1,75,560 நாற்றங்கால் உற்பத்தி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவரால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆனைமலை வட்டாத்தில் உள்ள 19 ஊராட்சிகளில் நர்சரிகளில் 14,720 மரக்கன்றுகளும், அன்னூர் வட்டாரத்தில் உள்ள 21 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 16276 மரக்கன்றுகளும், காரமடை வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், கிணத்துகடவு வட்டாரத்தில் உள்ள 34 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22000 மரக்கன்றுகளும், மதுக்கரை வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 9 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 6,976 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள 39 ஊஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 22,204 மரக்கன்றுகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் உள்ள 26 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 20,150 மரக்கன்றுகளும், சர்க்கார்சாமக்குளம் வட்டாரத்தில் உள்ள 7 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 5426 மரக்கன்றுகளும், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 15,500 மரக்கன்றுகளும், சூலூர் வட்டாரத்தில் உள்ள 17 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 13,176 மரக்கன்றுகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த நர்சரிகளில் 7,750 மரக்கன்றுகளும் என மொத்தம் 228 ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் 1,64,330 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...