தன்னை வெட்ட உள்ளதாக முகநூலில் கொலை மிரட்டல் - கோவை காவல் ஆணையரிடம் ஏ.பி.முருகானந்தம் புகார்

தனது முகநூல் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், தன்னை கண்ட துன்டமாக வெட்டுவோம் என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் யார் என்பதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை காவல் ஆணையரிடம் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார் அளித்துள்ளார்.


கோவை: பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்துள்ளது. அண்ணாமலையை கொச்சை படுத்தி பேசுவது மட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி நடு ரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள். இது பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.



அங்கு பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படவில்லை. எனது முகநூல் பக்கத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கண்ட துன்டமாக வெட்டுவோம் என தெரிவித்துள்ளனர். இவர்கள் யார் என்பதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

தொடர்ந்து ஆட்டை போல தன்னை வெட்டுவதாக தெரிவித்து வருகின்றனர். காவல்துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவங்கள் அனைத்தும் கீழ்த்தரமான அரசியலாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. ஆட்டை வெட்டுவது வேறு, ஆட்டில் அண்ணாமலையை புகைப்படத்தை மாட்டி வெட்டுவது வேறு, நேரடியாக அரசியல் களத்தில் மோதுவதற்கு துப்பு இல்லை. அன்றேக்கே இதை தடுக்கபட்டிருந்தால் இப்படி தொடர்ந்து கொலை மிரட்டல் வந்திருக்காது. இனி தமிழகத்தில் மிக பெரிய பிரச்சனையை சந்திக்க போகிறார்கள்.



அந்த கட்சியில் உள்ள தலைவர்கள் தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழிசை சௌந்தரராஜன் அமித்ஷா பேசுவது கண்டிப்பு என எப்படி சொல்ல முடியும், அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம், நமக்கு எப்படி தெரியும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...