தில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ரயில்நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், எஸ்டிபிஐ கட்சியின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் எ.அன்சர் செரீப் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் கோவை மண்டல தலைவர் எ.முஸ்தபா, மத்திய மாவட்டத் தலைவர் எ.எ.அப்துல் காதர், மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட வர்த்தக அணி தலைவர் அப்துல் ரஹீம், கோவை மாவட்ட தொழிற்சங்க தலைவர் எ.முகம்மது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், அப்பாஸ், புருஷோத் பாபு, இப்ராஹிம் பாதுஷா, ஈசாக், தொழிற்சங்க நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, இம்முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.