உடுமலை அருகே வளையபாளையத்தில் தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி காட்டு யானைகள் அட்டகாசம்

வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் ஐந்து வருடங்களாக வளர்க்கப்பட்டு வந்த தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தின. சேதமடைந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வளையபாளையம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்து ஐந்து வருடமாக பராமரிக்கப்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதியில் உள்ள மின் வேலியையும் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.



பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறையினரிடம் பேசிய விவசாயிகள், காட்டு யானைகள் கடந்த சில தினங்களாகவே விவசாய நிலங்களுக்குள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே வனத்துறையினர் சுற்றுகாவல் பணியில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான தென்னை மரங்களுக்கும் மின்வேலிக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...