மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமையை முதல்வர் காக்க வேண்டும் - குனியமுத்தூரில் கிருஷ்ணசாமி பேட்டி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கி நிர்வாகம் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி புகார் தெரிவித்துள்ளார்.



கோவை: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியாதவது, தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, கோவை மாவட்டம் வால்பாறை, முடீஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், திண்டுக்கல் மாவட்டம் ஹைவேசிஸ், சேலம் மாவட்டம் ஏற்காடு என ஐந்து மாவட்டங்களில் ஏறக்குறைய 200 வருடங்களுக்கு மேலாக தேயிலை, காப்பி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 10 லிருந்து 15 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்த வருகிறார்கள்.

இதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர்களின் காலத்தில் உருவாக்கப்பட்டது. அந்த தேயிலை தோட்டங்கள் பின்பு 99 வருட குத்தகைக்காக பிபிடிசி நிறுவனத்தின், முகமது ஜின்னா என்பவரின் மகன் வழி பேரனான முசில்வாடி தலைவருக்கு கொடுக்கபட்டது. இதற்கு உட்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் 2500 தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாகவும், 5 ஆயிரத்தில் இருந்து 7000 பேர் பகுதி நேர தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு சம்பளம் மிகக் குறைவாக கொடுக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சட்ட விதிமுறைகள் ஏதும் அமலாக்கப்படவில்லை. அந்தத் தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக மத்திய, மாநில அரசுகளிடம் 1998 ஆம் ஆண்டு தான் சட்டமன்றத்திலும், மத்திய அரசிடமும் தெரிவித்தேன். மேலும் அதில் அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது.

அவர்களின் சம்பளம் தற்போது 499 வரை உயர்ந்து இருக்கிறது. அவர்களை நடத்தக்கூடிய விதமும் தமிழ்நாடு எங்கும் மாறின. இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்க கூடிய வகையில் விருப்ப ஓய்வு என்ற பெயரில் அங்கு பணிபுரியக்கூடிய 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை கட்டாய கையெழுத்து வாங்கி அந்த நிர்வாகம் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

இன்றோடு கண்டிப்பாக பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களின் வேலையையும் நிறுத்தி விட்டார்கள். அவர்கள் அடுத்த 45 நாட்களுக்குள்ளாக மாஞ்சோலையில் இருந்து இருப்பிடத்தை காலி செய்யவும் அந்த நிர்வாகம் வற்புறுத்துகிறது. இப்போது பணிபுரியக்கூடிய தொழிலாளர்களால் தான் 8700 ஏக்கர் நிலமும் பயன்படுத்தப்பட்டு அங்கு விளையக்கூடிய தேயிலை தமிழ்நாட்டு மக்களுக்கும் பயன்படுகிறது. அந்நிய செலாவணியை ஈட்டுகிறது.

அந்த நிலம் அரசுக்கு சொந்தமான நிலம். தமிழ்நாடு அரசும் இந்திய அரசின் வனத்துறைக்கு சொந்தமான நிலம், 99 வருட குத்தகை 2024 ஆம் ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.

அந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தம் தான் முடிவடைகிறது தவிர, அங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை அதை காரணம் காட்டி நிர்வாகம் வெளியேற்றுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இருந்தாலும் கூட அங்கு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை வேண்டும் என்று பழிவாங்க கூடிய பி பி டி சி நிர்வாகம் அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தங்க சங்கிலியை பறிப்பது போல அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கிறார்கள். அதுவும் 20 வருடம் முதல் 30 வருடம் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வாக ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு நேற்று தொழிலாளர்களை அழைத்து தற்போது 25 சதவீதம் மட்டுமே கொடுக்கிறோம், நீங்கள் காலி செய்துவிட்டு போங்கல் பிறகு கொடுக்கிறோம் என அதிலும் ஒரு மோசடி நடக்கிறது. 

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு தான் விரிவாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். பல அரசியல் கட்சிகளும் இதில் தொடர்பாக ஆங்காமே குரல் எழுப்பி இருக்கிறார்கள். 1965 களில் இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களுக்கு தமிழ்நாடு தேயிலை தோட்டகழகம் மூலம் பணியமர்த்தப்பபட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் இலங்கைக்காட்டிலும் மோசமான நிலையில், பணிபுரிய கூடிய தொழிலாளர்களை நான்கைந்து தலைமுறைகளாக இருக்கக்கூடியவர்களை வெளியேற்றக் கூடிய மோசமான நிலைமை நடந்து கொண்டிருக்கிறது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும்.

பி பி டி சி நிறுவனம் 1990களில் எவ்வாறு தொழிலாளர்களிடம் இரக்கமின்றி நடந்து கொண்டதோ அதை காட்டிலும் தற்போது மிகக் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறது. குடியிருக்க கூடிய பகுதியில் குடிநீரை நிறுத்தி விடுவோம், மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என அச்சுறுத்தப்படுகிறார்கள். இதெல்லாம் அப்பட்டமான மனித உரிமை மீறல். அவர்களைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி பிபிடி சி நிறுவனம் குத்தகை முடிந்தால் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகமே எடுத்து நடத்தி, தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும்.

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்சினையை எழுப்பி மாநில அரசின் கவனத்தில் கொண்டு வர வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் பாராது தமிழ்நாடு சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சருக்கு உண்மைத் தன்மை எடுத்து சொல்லி அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தனது வேண்டுகோள். தேயிலை தோட்டங்கள் இருக்கக்கூடிய பகுதி காப்புக்காடு வனப்பகுதி,2028 அதற்கான ஒப்பந்த முடிவடையும் என இந்த அரசுக்கு தெரியும். 2015- ஜூன் மாதம் 15 ஆம் தேதி அன்று அந்த நிறுவனம் அந்த நிலத்தை ஹெச்டிஎஃப்சி வங்கியில் 50 கோடி ரூபாய்க்கு அடகு வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக அங்குள்ள தாசில்தார், விஏஓ இருந்திருக்கிறார்கள். அரசின் காப்புக்காடு என தெரிந்தும் சான்றிதழ்கள் வழங்கி இருக்கிறார்கள். அங்கு பல விதங்களில் அத்துமீறல் நடந்திருக்கிறது. அங்கு தொழிலாளர்களை வெளியேற்றி பி பி டி சி நிறுவனமே தன்னிடம் கைவசப்படுத்திக் கொண்டு வேறு ஏதோ தவறான செயல்களில் ஈடுபடுத்துவதற்காக தேயிலை தோட்டங்களை பயன்படுத்துவார்கள் என்ற சதி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

உடனடியாக தமிழக அரசு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களை கையெழுத்து போட வைத்துள்ளார்கள். அவர்களை தனித்தனியாக அழைத்து நான் தேயிலை தோட்டத்தை மூடிவிட்டு செல்லப் போகிறேன். உங்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும். கிடைப்பதை வாங்கிக் கொள் என அவர்களை மட்டும் இன்றி அந்த மாவட்ட ஆட்சியர் உடனும் பேசியிருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லாமல் கதவுகளை அடைத்து விட்டு கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.

2015ல் கையெழுத்து போட்டது இப்போது தான் வெளிவந்திருக்கிறது. இது சட்டப்படி விதிமீறல். அரசு அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதன் உரிமையாளரையும் கைது செய்ய வேண்டும். அந்த 50 கோடி ரூபாய் யாருடைய கைக்கு சென்று இருக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருக்கிறேன். தமிழ்நாடு அரசு நிலம் என தெரிந்த பிறகும் தாசில்தார் சான்றிதழ் வழங்கி இருக்கிறார். குத்தகை முடியப்போகிறது எனத் தெரிந்து எதற்காக சான்றிதழ் வழங்கினார். அது அரசு நிலம். இவர்கள் வெளியே செல்லக்கூடாது என்பதற்காக என்னென்ன வழி இருக்கிறதோ, சட்டத்தை மீறி pptc நிறுவனம் அங்கு வேறு ஏதோ ஒரு தவறு செய்வதற்காகத்தான் இதை செய்கிறது. இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல தனக்கு தெரிகிறது. 99.9% வரை அனைவரிடமும் கையெழுத்து வாங்கி விட்டார்கள். அனைவரும் விருப்பமே இல்லாமல் கட்டாயத்தின் பேரில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

நான்கு ஐந்து தலைமுறைகளாக கொசுகடியில் மிருகங்களுக்கிடையே பாம்புகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டங்களை எப்படி அழிப்பதற்கு தமிழக அரசு ஒத்துக்கொள்ள முடியும். மீண்டும் அதை உருவாக்குவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆவது.. ஒரு காலத்திலும் அந்த தேயிலை தோட்டங்கள் அழிப்பதற்கோ அழிந்து போவதற்கோ தமிழக அரசு அனுமதிக்க கூடாது. இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...