கோவையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மேலும் விரைவில் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
கோவை: தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி இல்ல காதணி நிகழ்ச்சியில், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.
விழாவில் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக இலவச நடமாடும் உணவு வாகனத்தை தமிழக வெற்றிக்கழக தேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறிய அவர், கோவை தெற்கு மாவட்டத்திலேயே இரண்டு வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும், இடத்தை தேர்வு செய்த பிறகு எங்கள் தலைவருடைய கவனத்திற்கு கொண்டு சென்று அவர் எந்த இடத்தை தேர்வு செய்வாரோ அதுகுறித்து அறிவிக்கப்படும் என கூறினார். முன்னதாக விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், தெரிவித்தார்.
நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கேள்விக்கு எங்கள் தலைவருடன் கலந்த ஆலோசித்து அதற்குண்டான விவரங்களை தெளிவாக கூறுவோம் என பதிலளித்தார்.