கோவை மாநகராட்சியில் சுகாதார பணிகளுக்காக தூய்மை பணியாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1.33 கோடி மதிப்பீட்டிலான புதிய வாகனங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கிகி வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.70க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், புரூக் பாண்டு சாலை, மாநகராட்சி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் வளாகத்தில் இன்று (18.06.2024) கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுகாதார பணிகளுக்காக தூய்மை பணியாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1.33 கோடி மதிப்பீட்டிலான புதிய வாகனங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தூய்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச் சட்டம் 2013ன் கீழ் தூய்மை பணியாளர்களின் மறுவாழ்வுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ், 14 தூய்மை பணியாளர்கள் மூன்று குழுக்களாக அமைத்து செயல்பட்டு வருகின்றனர். மேலும், இப்பணியாளர்களின் மேம்பாட்டிற்காக செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் (Septic Tank 6000 Ltrs) ரூ.46.00 இலட்சம், ஜெட்டிங் க்ராப்பிங் மற்றும் ராட்டிங் வானம் (Jetting, Grabbing and Rodding Machine 3in 1) ரூ.50 இலட்சம் மற்றும் திறந்தவெளி சாக்கடை சுத்தம் செய்யும் வாகனம் (Nalla Open Drain Cleaning Machine) ரூ.37 இலட்சம், என மொத்தமாக ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் மேயர் வழங்கி, வாகனங்களின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், இந்த வாகனங்கள் கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்தம் செய்து பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் வரும் வருவாய்களை மேற்காணும் தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலதன மானியமாக, 38 சதவிகிதம் மானியமாகவும், 5 சதவிகித வட்டி விகிதம் 7 ஆண்டுகள் வரை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வட்டியினை திரும்ப செலுத்துவதற்கு முதல் ஆறு மாத காலம் தடைக்காலம் ஆகும்.
இவ்வாகனங்களை நல்ல முறையில் பராமரித்து தங்களது வருவாயினை பெருக்கிக் கொள்ள வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் அறிவுறுத்தினர்.
இந்நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா, ரேவதி முரளி, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள் ஆண்டியப்பன், குணசேகரன், ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், திருமால், உதவி பொறியாளர் சதீஷ்குமார், சுகாதா ஆய்வாளர்கள் ராஜேந்திரன், தனபால், சரவணக்குமார், பவுன்ராஜ், சுகாதார மேற்பார்வையாளர்கள் மதுசெல்வம், ஆனந்தகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.