வருகின்ற 24ம் தேதி பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் - உடுமலையில் காங்கிரஸ் கமிட்டி செய்தி மாநில தொடர்பாளர் பேட்டி

தற்போது அமைந்துள்ள பாஜக அரசு தனி பெரும்பான்மை இல்லாமல் இருப்பதற்கு முழு காரணம் ராகுல் காந்தி தான். வருகின்ற 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தலின் போது பாஜக ஆட்சி உறுதியாக கவிழும் என காங்கிரஸ் கமிட்டி செய்தி மாநில தொடர்பாளர் இப்ராஹீம் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் முதியோர் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாநில செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான இப்ராஹிம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் இப்ராஹீம் பேசும் போது,



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்கும் வகையில் தற்பொழுது ராகுல் காந்தி செயல்பட்டு வருகின்றார். தற்போது அமைந்துள்ள பாஜக அரசு தனி பெரும்பான்மை இல்லாமல் இருப்பதற்கு முழு காரணம் ராகுல் காந்தி தான். வருகின்ற 24ஆம் தேதி சபாநாயகர் தேர்தலின் போது பாஜக ஆட்சி உறுதியாக நிறைவடையும்.

தற்சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் பாஜகவை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவுக்கு விழுந்த வாக்குகள் மற்றும் அயோத்தியில் டெபாசிட் இழப்பு என கூறலாம். இனியும் மதத்தை வைத்து அரசியல் செய்ய பாஜகவால் முடியாது. தமிழகத்தில் இரட்டை சகோதரர்களாக உள்ள மு.க. ஸ்டாலின் ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி 40க்கு 40. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெறும்.

காங்கிரஸ் கட்சி 130 ஆண்டுகளாக இந்தியா மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. மக்கள் விரேத சட்டங்களை எதிர்த்து வரும் ஒரே இயக்கம் காங்கிரஸ் இயக்கம். ஆனால் பாஜக அரசு மாநில கட்சிகளை பிரித்தாலும் சூழ்ச்சிகளை பல இடங்களில் செய்துள்ளது. தற்போது நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு தயவால் ஆட்சி அமைத்துள்ளது. இது என்றும் நிலைக்காது. நிதீஷ் குமார் ஆக்னி பாத்திட்டம், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர சிறப்பு அந்தஸ்து திட்டத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே தற்போது மைனாரிட்டி பாஜக அரசாகவே இருக்கும் நிலையில் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட கவுன்சிலர் ஜனதார்தனன், நகர தலைவர் கோ.ரவி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஜோஸ்வா, வட்டார தலைவர் வெங்கடேஷ், விவசாய அணி தலைவர் சிவக்கொழுந்து, உடுமலை நகராட்சி 4-வது வார்டு காங்கிரஸ் கட்சி நகரமன்ற உறுப்பினர் கலைவாணி சதிஸ்குமார், மாவட்ட செயலாளர் எஸ். முருகன், காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், திருச்சி முத்து, மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...