கோவையில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் - மதுக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூன் 19ம் தேதி தொடங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை: கோவை, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தைமாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று ஜூன்.19 தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டார். 

மேலும் அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.



மேலும் பள்ளிகளுக்கு செல்லாமல் இருந்த மாணவர்களிடமும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வி படிக்காமல் இருந்த மாணவ மாணவிகள் இடமும் நேரடியாக வீடுகளுக்கே சென்று அது குறித்து கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மதுக்கரை நகராட்சி அலுவலக கட்டுமான பணிகள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். 



மேலும் மதுக்கரை அரசு பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களின் வருகை குறித்தும் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு 6000 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவியினை வழங்கி 20 பயனாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...