கோவை மாவட்டம் சவுரிபாளையம் அருகே உள்ள தேர்வீதி பகுதியில் 1653 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், கோவை மாநகரத்தில் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்றியதால் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுக்கடைக்கு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
எனவே. மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் எனக்கோரி இன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, தேர்வீதி பகுதி மக்களின் டாஸ்மாக் கடை எண் 1653 முற்றுகை போராட்டத்தால் 12 மணிக்கு திறக்கப்படவேண்டிய கடை தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.