காவல் நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை - கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்கபடுகிறது என்றால் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த அரசே செயல்படாமல் உள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினே சொல்கிறார். நான் இரவில் தூங்கி காலையில் எழுந்ததும் என் கட்சி நிர்வாகிகளால் எந்த பிரச்சினை ஏற்படுமோ என்று அவரே சொல்லியிருக்கிறார். கட்சி அவரது கட்டுப்பாட்டிலேயே இல்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்து இருப்பது மன வேதனை அளிக்கிறது. மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இவர்கள் அனைவரும் ஏழைகள். பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்ட பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதி. இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடந்த இடத்திற்கு அருகே தான் காவல் நிலையம் உள்ளது. அதன் அருகே தான் நீதிமன்றம் இருக்கிறது. அதோடு மாவட்ட காவல் கண்காளிப்பாளர் இங்கே இருக்கிறார். மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். இப்படி இந்த பகுதியில், இவ்வளவு அதிகாரிகள் இருக்கின்ற மாவட்ட தலைநகரத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்கபடுகிறது என்றால் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

எங்களுக்கு கிடைத்த தகவல் படி, இதற்கு பின்னாலே மிகப்பெரிய கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்களே இந்த கள்ளச்சாராய சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு துணிச்சலாக, நகரத்தின் மையப்பகுதியில் காவல்நிலையத்தின் பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுமா?.. இது மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவில் இருந்து ஒவ்வொருவராக உயிரிழந்து வருவது ரொம்ப அதிர்ச்சியை அளிக்கிறது. இதேபோல் போதைபொருள் விவகாரத்திலும் தொடர்ந்து திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தேன். ஆனால் அதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்பும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. அப்போதே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்போது இப்படி நிகழ்ந்திருக்காது. இப்போது 36 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, ஏழைய எளிய மக்களின் விலை மதிக்க முடியாத உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...