கோவையின் பல்வேறு பகுதிகளில் பைக் வீலிங் - அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பைக் வீலிங் செய்து அச்சுறுத்தும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் திருச்சி சாலை, அவினாசி சாலை, ரேஸ்கோர்ஸ், கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில் வலம் வரும் சில பைக்கர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக திடீரென வீலிங் செய்து, பைக்கில் சாகசங்கள் செய்து அட்டகாசத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் செய்யும் அட்டகாசங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் c_l_u_t_c_h__breaker என்ற பெயரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பைக்குளில் இருந்து நம்பர் பிளேட்டை அகற்றி விடுகின்றனர். முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர்.

சாகசங்கள் செய்ய ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யாமல், பொது இடங்களில் சேட்டைகள் செய்து மக்களை அச்சுறுத்தும் நபர்களை கோவை மாநகர போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பிறர் உயிரோடு விளையாடும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஜூன்.20 கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...