கோவையில் சாலை ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க காவல்துறை அழைப்பு

கோவையில், போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பாதசாரிகள் மற்றும் வாகனச் செல்பவர்களுக்கான சாலை இடையூறுகள் நீக்கப்படும் செயல்முறைகளை பற்றி பொதுமக்கள் தகவல் அளிக்க கோரிக்கை.



கோவை: கோவை மாநகர் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் பாலகிருஷ்ணன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பணிகளை கடந்து, மக்கள் மத்தியில் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இதனிடையே, சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகர காவல் துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் கூறியதாவது: வாகனப்போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டத்திற்கு தடங்குதலாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது மாநகர காவல்துறை.

கோவை மேற்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 இடங்களிலும், கோவை கிழக்கு போக்குவரத்துப்பிரிவு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், என மொத்தம் 31 இடங்களில் சாலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அல்லது கோவை மாநகரில் சாலை ஆக்கிரமிப்பு சம்மந்தமாக தகவல் ஏதேனும் இருந்தால் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண். 9498181213 அல்லது 8190000100 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ அல்லது 0422 - 2300970 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு அல்லது கோவை மாநகர காவல்துறையின் @policecbecity என்ற X வலைதள கணக்கிற்கோ அல்லது Coimbatore City Police என்ற பேஸ்புக் பக்கத்திலோ தகவல் அளிக்கலாம் என காவல்துறை இன்று ஜூன்.20 அறிவித்துள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...