தாராபுரத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய, நகர, பேரூர், கழக திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் தாராபுரம் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

தாராபுரம் நகர பகுதிக்கு வருகை தந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் தாராபுரம் நகர பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், தந்தை பெரியாரின் திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதன் பிறகு தாராபுரம் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய, நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.இ. பிரகாஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் பேசியதாவது, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 63 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மொடக்குறிச்சி தனது சொந்த சட்டமன்ற தொகுதியில் மற்ற வேட்பாளர்களை விட 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.



இதேபோன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் தான் நமது கூட்டணி உழைப்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றாக உழைத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிகள் செய்வேன் எனவும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் நிதியிலிருந்து தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்வேன் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...