இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் விழாவானது புனித வெள்ளி என்றக்கப்படுகிறது. இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் சன்டேவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதே இந்நாள்.
இயேசு கிறிஸ்து கி.பி.33.ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இறந்தார் என கிருத்துவ மக்களால் கருதப்படுகிறது. முப்பது வெள்ளிக் காசுகளுக்காக இயேசுவை அவரது சீடராக இருந்த யூதாஸ் என்பவரே காட்டிக் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது.
வரலாற்றின் படி இயேசு எருசேலம் காவலர்களால் கைது செய்யப்பட்ட இயேசுவை கயபா என்ற தலைமைக் குரு விசாரித்தார். அவர் மீது பல முரண்பாடான குற்றங்கள் வைக்கப்பட்டது. இயேசுவுடன் இருந்த அவரது சீடர்களும் அவர் கைது செய்யப்பட்டதும் அவரை விட்டு ஓடி விட்டனர்.
பின்னர் இயேசு, ரோமின் மன்னர் பிலோத்துவிடம் அழைத்து செல்லப்பட்டார். அவர் இயேசுவை விசாரித்து விட்டு இயேசு குற்றமற்றவர் என்று கூறினார்.
ஆனால் மக்கள் அவர் கூறியதை ஏற்கும் மனநிலையில் இல்லை. சரியென, இயேசுவின் பகுதியான கலிலேயாவின் மன்னர் ஏரோதுவிடம் அவரை அனுப்ப முடிவெடுத்தார் பிலோத்து.
ஆனால், அவர் எருசேலம் சென்று விட்டதால் இயேசுவை சவுக்கால் அடித்து தண்டனை நிறைவேற்றி விடுதலை செய்துவிடலாம் என்று பிலோத்து முடிவெடுத்தார். எனினும் மக்கள் விடுவதாயில்லை, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையுமாறு கூறினார்கள்.
மக்களுக்கு எதிராக முடிவெடுத்தால் அதிர்ப்திகள் உண்டாகும் என்று பயந்த பிலோத்து மக்கள் கூறியபடியே செய்ய முன்வந்தார். எனினும், இதில் என் பங்கு ஏதும் இல்லை என்று கூறிவிட்டார்.
பின்னர், இயேசுவின் தலையில் முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையை சுமந்துவாரே கல்வாரிக்கு செல்ல பணிக்கப்பட்டார். இயேசுவை தலைவனாக ஏற்றுக் கொண்ட மக்கள் பலரும் கதறி அழுதனர். அந்நிலையிலும் இயேசு எனக்காக யாரும் அழ வேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்’ என்று கூறினார்.
கல்வாரியின் ஒரு குன்றின் மேல் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அன்றைய தினத்தில் மதிய நேரமே வானம் இருண்டு காணப்பட்டதாகவும் வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இயேசு சிலுவையில் அறையப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 3-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயிர் நீத்தார் என்றும், மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்றும் அவரது வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த உயிர்நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் சன்டேயாகவும் கொண்டாடி வருகின்றனர் கிறிஸ்துவர்கள் என்பதும் சான்றோர் கூற்று.
இதனை நினைவு கூறும் வகையில் கோவையில் உள்ள தேவாலயங்களில் இன்று சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற பிராத்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு இயேசு கிருஷ்துவின் வாழ்வை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
